எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்

20 | Total Attempts: 2309

SettingsSettingsSettings
Please wait...
Create your own Quiz
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் - Quiz

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,  அதற்கான பெட்டிக்குள் 'கிளிக்' செய்திடு.


Questions and Answers
 • 1. 
  மாதவன் பாடம் _______________________.
  • A. 

   படித்தார்

  • B. 

   படித்தான்

  • C. 

   படித்தாள்

  • D. 

   படித்தது

 • 2. 
  புறா இரையைத் _______________________.
  • A. 

   தின்றது

  • B. 

   தின்றன

  • C. 

   தின்றான்

  • D. 

   தின்றார்

 • 3. 
  நீங்கள் நண்பர்களைப் _____________________________.
  • A. 

   பார்த்தேன்

  • B. 

   பார்த்தாய்

  • C. 

   பார்த்தீர்கள்

  • D. 

   பார்த்தார்கள்

 • 4. 
  கோமதி மெதுவாகப் ______________________________.
  • A. 

   பேசினான்

  • B. 

   பேசியது

  • C. 

   பேசினார்

  • D. 

   பேசினாள்

 • 5. 
  கடும்புயலில் பல மரங்கள் ________________________.
  • A. 

   சாய்ந்தான்

  • B. 

   சாய்ந்தது

  • C. 

   சாய்ந்தன

  • D. 

   சாய்ந்தார்கள்

 • 6. 
  _____________________ எப்பொழுது வருவீர்கள்?
  • A. 

   நான்

  • B. 

   நீங்கள்

  • C. 

   நாங்கள்

  • D. 

   அவர்கள்

 • 7. 
  குற்றவாளி தலைகுனிந்து _________________________.
  • A. 

   நிற்கிறாள்

  • B. 

   நிற்கிறார்கள்

  • C. 

   நிற்கிறாய்

  • D. 

   நிற்கிறான்

 • 8. 
  _________________________ கவனமாகப் படித்தாயா?
  • A. 

   நான்

  • B. 

   நீ

  • C. 

   அவன்

  • D. 

   அவர்கள்

 • 9. 
  ஆசிரியர் பாலாவைப் ________________________.
  • A. 

   பாராட்டினார்

  • B. 

   பாராட்டினாள்

  • C. 

   பாராட்டினான்

  • D. 

   பாராட்டினார்கள்

 • 10. 
  காய்ந்த மரங்கள் மீண்டும் ___________________________.
  • A. 

   துளிர்த்தார்கள்

  • B. 

   துளிர்த்தாள்

  • C. 

   துளிர்த்தது

  • D. 

   துளிர்த்தன

 • 11. 
  மஞ்சுளா நேற்று பள்ளிக்கு _______________________.
  • A. 

   வந்தாள்

  • B. 

   வந்தான்

  • C. 

   வந்தது

  • D. 

   வந்தார்கள்

 • 12. 
  மிருகங்கள் கூட்டம் கூட்டமாய் _________________________.
  • A. 

   வாழ்கின்றன

  • B. 

   வாழ்கிறார்கள்

  • C. 

   வாழ்கிறது

  • D. 

   வாழ்கிறாயா

 • 13. 
  சிறுவர்கள் கட்டடம் தீப்பற்றி எரிவதைப் ________________________.
  • A. 

   பார்த்தான்

  • B. 

   பார்த்தனர்

  • C. 

   பார்த்தார்

  • D. 

   பார்த்தன

 • 14. 
  நான் கதையை நன்றாக வாசித்துக் ________________________.
  • A. 

   காட்டினேன்

  • B. 

   காட்டினான்

  • C. 

   காட்டியது

  • D. 

   காட்டினீர்கள்

 • 15. 
  வேடர்கள் புலிகளைக் ___________________________
  • A. 

   கொன்றன

  • B. 

   கொன்றீர்கள்

  • C. 

   கொன்றனர்

  • D. 

   கொன்றோம்

 • 16. 
   அம்பிகா பாட்டுப் ________________________.
  • A. 

   பாடினார்கள்

  • B. 

   பாடினாள்

  • C. 

   பாடினேன்

  • D. 

   பாடினோம்

 • 17. 
  விண்வெளி ஆராய்ச்சியாளர் ஏவுகணையைப் ___________________________
  • A. 

   பாய்ச்சினான்

  • B. 

   பாய்ச்சியது

  • C. 

   பாய்ச்சினார்கள்

  • D. 

   பாய்ச்சினார்

 • 18. 
  சிறுவர்கள் பட்டங்களைத் துரத்திச் ___________________________.
  • A. 

   சென்றன

  • B. 

   சென்றார்கள்

  • C. 

   சென்றீர்கள்

  • D. 

   சென்றோம்

 • 19. 
  காவலர் திருடனைத் ________________________
  • A. 

   துரத்தின

  • B. 

   துரத்தியது

  • C. 

   துரத்தினார்

  • D. 

   துரத்தினான்

 • 20. 
  தாயைப் பார்த்த குழந்தை மெல்லச் ___________________
  • A. 

   சிரித்தான்

  • B. 

   சிரித்தது

  • C. 

   சிரித்தன

  • D. 

   சிரித்தேன்

Back to Top Back to top