வெளிப்படுத்தல் (the Revelation)

30 Questions

Settings
Please wait...
 (the Revelation)

பரிசுத்த வேத வினா போட்டி திவ்ய வாசகனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் (The Book of Revelation to John)   Sharon Rose Ministries, Let's be prepared Erode, Tamilnadu, India www.sharonrose.in www.sharonrose.org.in


Questions and Answers
 • 1. 
  சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய _____________ வெளிப்படுத்தினதுமான விசேஷம். (வெளிப்படுத்தல் 1:1)
  • A. 

   யோவானுக்கு

  • B. 

   யோவான் ஸ்நானகனுக்கு

 • 2. 
  இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும்__________, காலம் சமீபமாயிருக்கிறது. (வெளிப்படுத்தல் 1:3)
  • A. 

   பாக்கியவான்கள்

  • B. 

   பரிசுத்தவான்கள்

  • C. 

   நீதிமான்கள்

  • D. 

   ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

 • 3. 
  யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற _________ ஆவிகளாலும், (வெளிப்படுத்தல் 1:4)
  • A. 

   மூன்று

  • B. 

   ஏழு

  • C. 

   ஐந்து

 • 4. 
  ஆட்டுகுட்டியானவர் முதல் நான்கு முத்திரைகளை உடைத்த போது புறப்பட்ட குதிரைகள் - (வெளிப்படுத்தல் 6:1-8) கீழ்க்கண்டவற்றை சரியாகப் பொருத்தவும். (Match the following) - அனைத்தும் சரியாக பொருந்தினால் மட்டுமே மதிப்பெண் உண்டு.
  • A. முதல் முத்திரை
  • A.
  • B. இரண்டாம் முத்திரை
  • B.
  • C. மூன்றாம் முத்திரை
  • C.
  • D. நான்காம் முத்திரை
  • D.
 • 5. 
  இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் __________. அப்படியே ஆகும், ஆமென். (வெளிப்படுத்தல் 1:7)
  • A. 

   பயப்படுவார்கள்

  • B. 

   பரவசப்படுவார்கள்

  • C. 

   புலம்புவார்கள்

 • 6. 
  கர்த்தருடைய நாளில் ________; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். (வெளிப்படுத்தல் 1:10)
  • A. 

   தரிசனங்கண்டேன்

  • B. 

   ஆவிக்குள்ளானேன்

  • C. 

   சொப்பனங்கண்டேன்

 • 7. 
  அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, _________ பொன் குத்துவிளக்குகளையும், (வெளிப்படுத்தல் 1:12)
  • A. 

   மூன்று

  • B. 

   ஏழு

  • C. 

   பத்து

 • 8. 
  தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து ________ புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது. (வெளிப்படுத்தல் 1:16)
  • A. 

   இருபுறமும் கருக்குள்ள பட்டயம்

  • B. 

   வார்த்தை

  • C. 

   அக்கினி

  • D. 

   பட்டயம்

 • 9. 
  மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் _______________ திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்தல் 1:18)
  • A. 

   நித்திய ஜீவனுக்குரிய

  • B. 

   உயிர்த்தெழுதலுக்குமுரிய

  • C. 

   பாதாளத்திற்குமுரிய

 • 10. 
  ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த _______ விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. (வெளிப்படுத்தல் 2:4)
  • A. 

   அன்பை

  • B. 

   பரிசுத்தத்தை

  • C. 

   விசுவாசத்தை

 • 11. 
  அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது; அவருடைய சத்தம் __________ இரைச்சலைப்போலிருந்தது. (வெளிப்படுத்தல் 1:15)
  • A. 

   இரதங்களின்

  • B. 

   பெருவெள்ளத்து

  • C. 

   குதிரைகளின்

 • 12. 
  என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம். (வெளிப்படுத்தல் 1:20)
  • A. 

   தவறு

  • B. 

   சரி

 • 13. 
  உங்களுக்குள்ளதை நான் _______ பற்றிக்கொண்டிருங்கள். (வெளிப்படுத்தல் 2:25)
  • A. 

   வருமளவும்

  • B. 

   ஆசீர்வதிக்குமளவும்

 • 14. 
  லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ______ என்பவர் சொல்லுகிறதாவது; (வெளிப்படுத்தல் 3:14)
  • A. 

   ஆமென்

  • B. 

   அல்பா

  • C. 

   ஒமேகா

 • 15. 
  இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என்  ________. (வெளிப்படுத்தல் 3:16)
  • A. 

   வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்

  • B. 

   சமூகத்திலிருந்து விலக்கி போடுவேன்

 • 16. 
  நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, ________. (வெளிப்படுத்தல் 3:19)
  • A. 

   மனந்திரும்பு

  • B. 

   விசுவாசி

  • C. 

   பரிசுத்தமாயிரு

  • D. 

   விழித்திரு

 • 17. 
  ...   __________ மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன். (வெளிப்படுத்தல் 4:4)
  • A. 

   இருபத்துநான்கு

  • B. 

   இருபது

  • C. 

   பன்னிரண்டு

 • 18. 
  அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான _________; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன. (வெளிப்படுத்தல் 4:6)
  • A. 

   கண்ணாடிக்கடலிருந்தது

  • B. 

   மாளிகை இருந்தது

  • C. 

   தேவனுடைய ஆலயம் இருந்தது

 • 19. 
  வெளிப்படுத்தல் 4:7 - இந்த வசனத்தின் படி கீழ்க்கண்டவற்றை சரியாக பொருத்தவும் (Match the following). - அனைத்தும் சரியாக பொருந்தினால் மட்டுமே மதிப்பெண் உண்டு.
  • A. முதலாம் ஜீவன்
  • A.
  • B. இரண்டாம் ஜீவன்
  • B.
  • C. மூன்றாம் ஜீவன்
  • C.
  • D. நான்காம் ஜீவன்
  • D.
 • 20. 
  அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ________ என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. (வெளிப்படுத்தல் 4:8)
  • A. 

   பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

  • B. 

   நல்லவர் நல்லவர் நல்லவர்

  • C. 

   சர்வ வல்லவர் சர்வ வல்லவர் சர்வ வல்லவர்

 • 21. 
  அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ____ முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன். (வெளிப்படுத்தல் 5:1)
  • A. 

   ஏழு

  • B. 

   மூன்று

  • C. 

   ஐந்து

 • 22. 
  அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, ________ தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். (வெளிப்படுத்தல் 5:5)
  • A. 

   யூதா கோத்திரத்துச் சிங்கமும்

  • B. 

   சமாதனப்பிரபுவும்

  • C. 

   ஆட்டுக்குட்டியுமானவரும்

 • 23. 
  அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ________ சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம். (வெளிப்படுத்தல் 5:6)
  • A. 

   ஆட்டுக்குட்டி

  • B. 

   ஆடு

  • C. 

   செம்மறியாடு

 • 24. 
  தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய _________ மீட்டுக்கொண்டு, (வெளிப்படுத்தல் 5:9)
  • A. 

   இரத்தத்தினாலே

  • B. 

   நித்திய கிருபையினாலே

  • C. 

   முடிவில்லா இரக்கங்களால்

 • 25. 
  தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை _________________; நாங்கள்  பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். (வெளிப்படுத்தல் 5:9-10)
  • A. 

   ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்

  • B. 

   ராஜாக்களாக்கினீர்

  • C. 

   பரிசுத்தவான்களாக்கினீர்

 • 26. 
  பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக _______ சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. (வெளிப்படுத்தல் 5:11)
  • A. 

   தூதர்களுடைய

  • B. 

   ஜீவன்களுடைய

  • C. 

   நீதிமான்களுடைய

  • D. 

   பரிசுத்தவான்களுடைய

 • 27. 
  அவருடைய __________ வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 6:17)        
  • A. 

   கோபாக்கினையின் மகாநாள்

  • B. 

   நியாயத்தீர்ப்பின் மகாநாள்

  • C. 

   வருகையின் மகாநாள்

 • 28. 
  நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் ________ முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். (வெளிப்படுத்தின விசேஷம் 7:3)
  • A. 

   நெற்றிகளில்

  • B. 

   வலது கைகளில்

 • 29. 
  முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் _____________. (வெளிப்படுத்தின விசேஷம் 7:4)          
  • A. 

   இலட்சத்து இருபதாயிரம்பேர்

  • B. 

   இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்

  • C. 

   இலட்சத்து இருபத்து நாலாயிரம்பேர்

 • 30. 
  இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், _______ அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். (வெளிப்படுத்தின விசேஷம் 7:9)
  • A. 

   வெள்ளை

  • B. 

   சிவப்பு