Holy Bible Quiz (tamil) - The Psalms Chap 1-20

20 Questions

Settings
Please wait...
Holy Bible Quiz (tamil) - The Psalms Chap 1-20

Sharon Rose Ministries, Erode www.sharonrose.in   www.sharonrose.org.in இந்த வேத வினா போட்டியின் நோக்கம்,வேதவசனத்தை ஒரு எழுத்தையும் மாற்றாமல் எவ்வளவு தூரம் நாம் அறிந்து நினைவில் வைத்து இருக்கிறோம் என்பதை நாம் அறிந்து கொள்ளவே.இவ்வளவு துல்லியமாய் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டுமா? கட்டாயமாக, ஏனென்றால் "இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." ஆமோஸ் 8:11 எனவே, கேள்விக்கு சரியான விடை என்பது வசனம் வேதத்தில் எப்படி உள்ளது என்பதே.  ஏறக்குறைய சரியான விடை / இதுவும் சரியான விடை என்பது இப்போட்டியில் இல்லை. நன்றி, ஆவியின் பட்டயத்தோடு நீங்கள் தயாரா?   (Please ensure "Accept third-party cookie" option box is checked in Mozilla firefox to have   Quiz working properly. Internet Explorer / Firefox Browser ஐ உபயோகிக்கவும்.)


Questions and Answers
 • 1. 
  நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய _____ என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார். (சங்கீதம் 2:6)
  • A. 

   எருசலேம்மீதில்

  • B. 

   சீனாய்மீதில்

  • C. 

   சீயோன்மீதில்

  • D. 

   இவற்றில் எதுவுமில்லை

 • 2. 
  _______ கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.    (சங்கீதம் 2:12)
  • A. 

   தேவன்

  • B. 

   குமாரன்

  • C. 

   கர்த்தர்

  • D. 

   இயேசு கிறிஸ்து

 • 3. 
  நீங்கள் கோபங்கொண்டாலும், ______ உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.) (சங்கீதம் 4:4)
  • A. 

   தீங்கு நினையாதிருங்கள்;

  • B. 

   பொல்லாங்கு செய்யாதிருங்கள்;

  • C. 

   பாவஞ்செய்யாதிருங்கள்;

 • 4. 
  பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் ______________    (சங்கீதம் 5:6)
  • A. 

   அருவருக்கிறார்.

  • B. 

   வெறுக்கிறார்.

  • C. 

   அழிக்கிறார்

 • 5. 
  கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, _______ என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர்.    (சங்கீதம் 5:12)
  • A. 

   கிருபை

  • B. 

   நீதி

  • C. 

   காருணியம்

 • 6. 
  சத்துரு சிங்கம்போல் ___________பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப்பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.    (சங்கீதம் 7:2)
  • A. 

   என்னைப்

  • B. 

   என் ஆத்துமாவைப்

 • 7. 
  7:11 தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் ________7:12 அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். (சங்கீதம் 7:11-12)
  • A. 

   மனதுருகுகிற தேவன்

  • B. 

   சினங்கொள்ளுகிற தேவன்

  • C. 

   இரக்கங்கோள்கிற தேவன்

 • 8. 
  பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் __________வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.    (சங்கீதம் 8:2)
  • A. 

   பரிசுத்தரின்

  • B. 

   நீதிமான்கள்

  • C. 

   குழந்தைகள் பாலகர்

 • 9. 
   8:3 உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, 8:4 _______ நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.    (சங்கீதம் 8:3-4)
  • A. 

   மனுஷனை

  • B. 

   துன்மார்க்கனை

  • C. 

   பாவியை

 • 10. 
  நீர் அவனை ________ சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.    (சங்கீதம் 8:5)
  • A. 

   தேவதூதரிலும்

  • B. 

   உம் சிருஷ்டிப்பில்

 • 11. 
  துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும்,______________    (சங்கீதம் 9:17)
  • A. 

   நியாயந்தீர்க்கப்படுவார்கள்

  • B. 

   நரகத்திலே தள்ளப்படுவார்கள்

  • C. 

   தண்டிக்கப்படுவார்கள்

 • 12. 
  எளியவன் என்றைக்கும் ___________சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.    (சங்கீதம் 9:18)
  • A. 

   கைவிடப்படுவதில்லை

  • B. 

   பாடனுபவிக்கிரதில்லை

  • C. 

   மறக்கப்படுவதில்லை

 • 13. 
  ஜாதிகள் தங்களை மனுஷரென்று அறியும்படிக்கு, அவர்களுக்கு__________ , கர்த்தாவே. (சேலா.)    (சங்கீதம் 9:20)
  • A. 

   பயமுண்டாக்கும்

  • B. 

   உணர்வுண்டாக்கும்

  • C. 

   நினைப்பூட்டும்

 • 14. 
  துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் _______    (சங்கீதம் 10:4)
  • A. 

   தேவன் இல்லையென்பதே

  • B. 

   தேவன் என்னை பார்ப்பதில்லையென்பதே

  • C. 

   தேவன் என்னை தண்டிப்பதில்லையென்பதே

 • 15. 
  இச்சகம்பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் __________    (சங்கீதம் 12:3)
  • A. 

   அழித்துப்போடுவார்

  • B. 

   அறுத்துப்போடுவார்

 • 16. 
  கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் _________உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.    (சங்கீதம் 12:6)
  • A. 

   ஏழுதரம்

  • B. 

   மூன்றுதரம்

  • C. 

   நான்குதரம்

 • 17. 
  ___________என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.    (சங்கீதம் 14:1)
  • A. 

   தேவன் இல்லை

  • B. 

   தீங்கு இல்லை

  • C. 

   நீதி இல்லை

 • 18. 
  _________இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.    (சங்கீதம் 14:7)
  • A. 

   பெத்லகேமிலிருந்து

  • B. 

   எருசலேமிலிருந்து

  • C. 

   சீயோனிலிருந்து

 • 19. 
  தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் ________    (சங்கீதம் 15:5)
  • A. 

   ஆசீர்வதிக்கப்படுவான்

  • B. 

   அசைக்கப்படுவதில்லை

  • C. 

   நிலைத்திருக்கிறான்

 • 20. 
  ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் ___________ உண்டு.    (சங்கீதம் 16:11)
  • A. 

   நித்திய பேரின்பமும்

  • B. 

   நித்திய ஜீவனும்

  • C. 

   பரிபூரண மகிழ்ச்சியும்

  • D. 

   நித்திய வெளிச்சமும்