Bible Quiz - New Testament - Matthew -chap 15 To 28 (Tamil)

40 Questions | Attempts: 9747
Share

SettingsSettingsSettings
Bible Quiz - New Testament - Matthew -chap 15 To 28 (Tamil) - Quiz

Sharon Rose Ministries, Erode      www.sharonrose.org.in www.sharonrose.inஇந்த வேத வினா போட்டியின் நோக்கம்,வேதவசனத்தை ஒரு எழுத்தையும் மாற்றாமல் எவ்வளவு தூரம் நாம் அறிந்து நினைவில் வைத்து இருக்கிறோம் என்பதை நாம் அறிந்து கொள்ளவே.இவ்வளவு துல்லியமாய் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டுமா? கட்டாயமாக, ஏனென்றால் ”இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.” ஆமோஸ் 8:11எனவே, கேள்விக்கு சரியான விடை என்பது வசனம் வேதத்தில் எப்படி உள்ளது என்பதே.  ஏறக்குறைய சரியான விடை / இதுவும் சரியான விடை என்பது இப்போட்டியில் இல்லை. நன்றி, ஆவியின் பட்டயத்தோடு நீங்கள் தயாரா?   (Please ensure "Accept third-party cookie" option box is checked in Mozilla firefox to have   Quiz working properly. Internet Explorer / Firefox Browser ஐ உபயோகிக்கவும்.)


Questions and Answers
  • 1. 
    இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் ____________ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;    (மத் 15:8)   
    • A. 

      நம்பிக்கையோ

    • B. 

      விசுவசமோ

    • C. 

      இருதயமோ

  • 2. 
    _______________ உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.    (மத் 15:9)   
    • A. 

      மனுஷருடைய கற்பனைகளை

    • B. 

      சொந்த கற்பனைகளை

    • C. 

      மனுஷருடைய வழிகளை

  • 3. 
    வாயிலிருந்து புறப்படுகிறவைகள் __________ புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.    (மத் 15:18)
    • A. 

      சிந்தையிலிருந்து

    • B. 

      இருதயத்திலிருந்து

    • C. 

      ஆவியிலிருந்து

  • 4. 
    (ஏழு அப்பங்களையும், சில சிறு மீன்களையும் கொண்டு கர்த்தர் போஷித்த பின்பு,) எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ______________ எடுத்தார்கள். ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் ____________________.    (மத் 15:37,38)
    • A. 

      நாலு கூடைநிறைய, ஐயாயிரம்பேராயிருந்தார்கள்

    • B. 

      ஏழு கூடைநிறைய, நாலாயிரம்பேராயிருந்தார்கள்

    • C. 

      மூன்று கூடைநிறைய,ஆறாயிரம்பேராயிருந்தார்கள்

  • 5. 
    அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: _____________ என்றான்.    (மத் 16:15-16)
    • A. 

      தேவகுமாரன்

    • B. 

      நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து

    • C. 

      மனுஷகுமாரன்

  • 6. 
    அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் __________ என்னைப் பின்பற்றக்கடவன்.    (மத் 16:24)   
    • A. 

      தன்னைத்தான் வெறுத்து, என் கற்பனைகளை கைகொண்டு

    • B. 

      தன்னைத்தான் வெறுத்து

    • C. 

      தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு

  • 7. 
    தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன்_________ . என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.    (மத் 16:25)
    • A. 

      விண்ணப்பம் பண்ணக்கடவன்.

    • B. 

      அதை ரட்சிக்க முடியாது.

    • C. 

      அதை இழந்துபோவான்.

  • 8. 
    ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு ____________ கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்,அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.    (மத் 17:1-2)
    • A. 

      பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும்

    • B. 

      அந்திரேயாவையும், பிலிப்புவையும், தோமாவையும்

    • C. 

      மத்தேயுவையும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபையும், செலோத்தே என்னப்பட்ட சீமோனையும்

  • 9. 
    இந்த ஜாதிப் பிசாசு _________ மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.    (மத் 17:21)
    • A. 

      துதியினாலும், ஜெபத்தினாலுமேயன்றி

    • B. 

      ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி

    • C. 

      விசுவாசத்தினாலும்,உபவாசத்தினாலுமேயன்றி

  • 10. 
    ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னை __________ எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.    (மத் 18:4)
    • A. 

      சிறியவனாக நினைக்கிறவன்

    • B. 

      நினைக்கிறவன்

    • C. 

      தாழ்த்துகிறவன்

  • 11. 
    இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது ______ சித்தமல்ல.    (மத் 18:14)
    • A. 

      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின்

    • B. 

      என்

    • C. 

      பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின்

  • 12. 
    அல்லாமலும், உங்களில் ______ தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே _______, பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.    (மத் 18:19)
    • A. 

      இரண்டு பேர், விசுவாசித்திருந்தால்

    • B. 

      இரண்டு பேர், ஒருமனப்பட்டிருந்தால்

    • C. 

      மூன்று பேர், ஒருமனப்பட்டிருந்தால்

  • 13. 
    அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.அதற்கு இயேசு: ______ என்று உனக்குச் சொல்லுகிறேன்.    (மத் 18:21)
    • A. 

      ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும்

    • B. 

      ஏழுதரமாத்திரம் அல்ல

    • C. 

      ஏழெழுபதுதரமட்டும்

  • 14. 
    அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்.அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் _____ என்றார்.    (மத் 19:16-17)   
    • A. 

      கற்பனைகளைக் கைக்கொள்

    • B. 

      என்னை பின்தொடர்ந்து வா

    • C. 

      என்னை விசுவாசி

  • 15. 
    அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ____________பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.    (மத் 19:23)
    • A. 

      தரித்திரன்

    • B. 

      ஐசுவரியவான்

    • C. 

      இவர்களிருவரும்

  • 16. 
    என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் __________சுதந்தரித்துக்கொள்ளுவான்;    (மத் 19:29)
    • A. 

      இரண்டத்தனையாய் அடைந்து, நித்தியஜீவனையும்

    • B. 

      நூறத்தனையாய் அடைந்து, நித்தியஜீவனையும்

  • 17. 
    இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் _______தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ ______ என்றார்.    (மத் 20:16)
    • A. 

      சிலர், அநேகர்

    • B. 

      அநேகர், சிலர்

  • 18. 
    உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ___________    (மத் 20:27)
    • A. 

      சிறியவனாயிருக்கக்கடவன்

    • B. 

      ஊழியக்காரனாயிருக்கக்கடவன்

    • C. 

      பெரியவனாயிருக்க்க்கடவன்

  • 19. 
    உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற ______ அன்றையத்தினம் அவரிடத்தில் வந்து:    (மத் 22:23)
    • A. 

      பரிசேயர்

    • B. 

      சதுசேயர்

    • C. 

      இவ்விருவரும்

  • 20. 
    உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே ___________இருப்பார்கள்;    (மத் 22:30)
    • A. 

      ராஜாக்களைபோல்

    • B. 

      பிள்ளைகளைபோல்

    • C. 

      தேவதூதரைப்போல்

  • 21. 
    பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; __________ உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.    (மத் 23:9)
    • A. 

      தேவன் ஒருவரே

    • B. 

      கர்த்தர் ஒருவரே

    • C. 

      பரலோகத்திலிருக்கிற ஒருவரே

  • 22. 
    நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; _________உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.    (மத் 23:10)
    • A. 

      கிறிஸ்து ஒருவரே

    • B. 

      மனுஷகுமாரன் ஒருவரே

    • C. 

      இரட்சகர் ஒருவரே

  • 23. 
    தன்னை _______ தாழ்த்தப்படுவான், தன்னை______ உயர்த்தப்படுவான்.    (மத் 23:12)
    • A. 

      தாழ்த்துகிறவன், உயர்த்துகிறவன்

    • B. 

      உயர்த்துகிறவன், தாழ்த்துகிறவன்

  • 24. 
    தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் _______ சத்தியம்பண்ணுகிறான்.    (மத் 23:21)
    • A. 

      அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும்

    • B. 

      தேவன்பேரில்

    • C. 

      இயேசுகிறிஸ்துவின் பேரில்

  • 25. 
    வானத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் _________ சத்தியம்பண்ணுகிறான்.    (மத் 23:22)
    • A. 

      இயேசுகிறிஸ்துவின்பேரில்

    • B. 

      தேவன்பேரில்

    • C. 

      தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும்

Back to Top Back to top
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.