Gurugulam.Com Online Test

50 Questions | Attempts: 240
Share
SettingsSettings
Please wait...
  • 1/50 Questions

    42)வருபுனல் – இலக்கணக்குறிப்பு 

    • அ)வினைத்தொகை
    • ஆ)பண்புத்தொகை
    • இ)உம்மைத் தொகை
    • ஈ)வேற்றுமைத் தொகை
Please wait...


Quiz Preview

  • 2. 

    9)பொது மொழி எது? 

    • அ)அவரது

    • ஆ)அந்தமான்

    • இ)எந்த வீடு

    • ஈ)இவ்விடம்.

    Correct Answer
    A. ஆ)அந்தமான்
  • 3. 

    13)வினைமுற்றின் விகுதி குறைந்து நிற்கும் சொல் ___ எனப்படும். 

    • அ)இடைநிலை

    • ஆ)குறிப்பு

    • இ)முற்று

    • ஈ)எச்சம்.

    Correct Answer
    A. ஈ)எச்சம்.
  • 4. 

    43)மாமுன் நிரை, விளமுன் நேர் வருவது 

    • 43)மாமுன் நிரை, விளமுன் நேர் வருவது

    • ஆ)இயற்சீர் வெண்டளை

    • இ)வஞ்சித்தளை

    • ஈ)கலித்தளை

    Correct Answer
    A. ஆ)இயற்சீர் வெண்டளை
  • 5. 

    2.கல் + தீது 

    • அ)கட்டீது

    • ஆ)கஃறீது

    • இ)கல்தீது

    • ஈ)கற்றீது

    Correct Answer
    A. ஆ)கஃறீது
  • 6. 

    3.மொழி முதல், இடை, கடை மூவிடங்களில் இடம்பெறும் குறுக்கம் 

    • அ) ஔகாரக்குறுக்கம்

    • ஆ)ஐகாரக்குறுக்கம்

    • இ)மகரக்குறுக்கம்

    • ஈ)ஆய்தக்குறுக்கம்

    Correct Answer
    A. ஆ)ஐகாரக்குறுக்கம்
  • 7. 

    1.மொழிமுதல் மட்டுமே வரும் குறுக்கம் 

    • அ) ஔகாரக்குறுக்கம்

    • ஆ)ஐகாரக்குறுக்கம்

    • இ)மகரக்குறுக்கம்

    • ஈ)ஆய்தக்குறுக்கம்

    Correct Answer
    A. அ) ஔகாரக்குறுக்கம்
  • 8. 

    39)ஒரு தலைக் காமம் 

    • அ)பெருந்திணை

    • ஆ)கைக்கிளைத் திணை

    • இ)பொதுவியல் திணை

    • ஈ)பாடாண் திணை

    Correct Answer
    A. ஆ)கைக்கிளைத் திணை
  • 9. 

    45)வண்டு ______ (ஒலிமரபினைக் கண்டறி) 

    • அ)குழறும்

    • ஆ)முரலும்

    • இ)குனுகும்

    • ஈ)அகவும்

    Correct Answer
    A. ஆ)முரலும்
  • 10. 

    48)சரியான வினைமரபைக் கண்டறி 

    • அ)பால் குடித்தான்

    • ஆ)பால் அருந்தினான்

    • இ)பால் பருகினான்

    • ஈ)பாலுண்டான்

    Correct Answer
    A. இ)பால் பருகினான்
  • 11. 

    23)கற்சிலை என்பது 

    • அ)கெடுதல் விகாரம்

    • ஆ)தோன்றல் விகாரம்

    • இ)திரிதல் விகாரம்

    • ஈ)இயல்பு புணர்ச்சி

    Correct Answer
    A. இ)திரிதல் விகாரம்
  • 12. 

    50) கஅ  +  உரு = ? 

    • அ) 33

    • ஆ) 43

    • இ) 52

    • ஈ)41.

    Correct Answer
    A. ஆ) 43
  • 13. 

    8)தனித்து ஒரு பொருளையும் பிரிந்து நின்று வேறு பொருளையும் தருவது 

    • அ)தனிமொழி

    • ஆ)தொடர்மொழி

    • இ)பொதுமொழி

    • ஈ)எதுவுமில்லை

    Correct Answer
    A. இ)பொதுமொழி
  • 14. 

    30)நிலமும் பொழுதும், 

    • அ)முதற் பொருள்

    • ஆ)கருப்பொருள்

    • இ)உரிப்பொருள்

    • ஈ)இடப்பொருள்

    Correct Answer
    A. அ)முதற் பொருள்
  • 15. 

    22)மலர் போன்ற முகம் பெற்றவள் – இத்தொடரில் உவமேயம் என்பது 

    • அ)மலர்

    • ஆ)போன்ற

    • இ)முகம்

    • ஈ)பெற்றவள்.

    Correct Answer
    A. இ)முகம்
  • 16. 

    36) எற்பாடு என்பது 

    • அ) இரவு 2 மணிமுதல் காலை 6 வரை

    • ஆ)பிற்பகல் 2 மணிமுதல் 6 மணி வரை

    • இ)காலை 6 மணிமுதல் 10 மணிவரை

    • ஈ)காலை 10 மணிமுதல் 2 மணி வரை

    Correct Answer
    A. ஆ)பிற்பகல் 2 மணிமுதல் 6 மணி வரை
  • 17. 

    7.ஔவை – மாத்திரை கணக்கிடுக. 

    • அ) 4

    • ஆ) 2 ½

    • இ) 3

    • ஈ) 3 ½

    Correct Answer
    A. ஆ) 2 ½
  • 18. 

    5.ஆய்தக்குறுக்கம் மாத்திரையளவு 

    • அ)அரை

    • ஆ)ஒன்று

    • இ)இரண்டு

    • ஈ)கால்

    Correct Answer
    A. ஈ)கால்
  • 19. 

    11)காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினைமுற்று 

    • அ)குறிப்பு வினைமுற்று

    • ஆ)தெரிநிலை வினைமுற்று

    • இ)வினைத்தொகை

    • ஈ)படர்க்கை வினைமுற்று

    Correct Answer
    A. அ)குறிப்பு வினைமுற்று
  • 20. 

    17)ஒருபொருட் பன்மொழிக்குச் சான்று 

    • அ)உயர்ந்தோங்கி

    • ஆ)மீமிசை

    • இ) மேற்கொன்டுள்ள இரண்டும் தவறு

    • ஈ) இரண்டும் சரி

    Correct Answer
    A. ஈ) இரண்டும் சரி
  • 21. 

    27)கூற்று 1 :அ ,இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின் வல்லினம் மிகும்  கூற்று 2 :அது, இது, உது எனும் சுட்டுச்சொற்களை அடுத்து வரும் வல்லினம் மிகாது. 

    • அ)கூற்று 1 சரி கூற்று 2 தவறு

    • ஆ)கூற்று 1 சரி கூற்று 2ம் சரி

    • இ)கூற்று 1 தவறு கூற்று 2 சரி

    • ஈ) இரண்டு கூற்றுகளும் தவறானது.

    Correct Answer
    A. ஆ)கூற்று 1 சரி கூற்று 2ம் சரி
  • 22. 

    35)தவறான இணையைக் கண்டறி 

    • அ)முல்லை – ஞாழல்

    • ஆ)குறிஞ்சி – அகில்

    • இ)மருதம் – காஞ்சி

    • ஈ)நெய்தல் – புன்னை

    Correct Answer
    A. அ)முல்லை – ஞாழல்
  • 23. 

    40)நிரை மீட்கச் செல்பவன் சூடும் பூ 

    • ஆ)வெட்சி

    • ஆ)கரந்தை

    • இ)உழிஞை

    • ஈ)நொச்சி

    Correct Answer
    A. ஆ)கரந்தை
  • 24. 

    16)எழுத போகிறாயா?  எனும் கேள்விக்கு இனமொழி விடை 

    • அ)கை வலிக்கும்

    • ஆ)நீயே எழுது

    • இ)படிக்க போகிறேன்

    • ஈ)எழுதாமல் இருப்பேனா?

    Correct Answer
    A. இ)படிக்க போகிறேன்
  • 25. 

    37)தண்டளிர் – பிரித்து எழுதுக 

    • அ)தண்டு + அளிர்

    • ஆ)தண்டம் + தளிர்

    • இ)தண் + தளிர்

    • ஈ)தண்மை + தளிர்.

    Correct Answer
    A. ஈ)தண்மை + தளிர்.
  • 26. 

    14)இனங்குறித்தலுக்குச் சான்று:- 

    • அ)வெற்றிலைத் தின்றான்

    • ஆ)மாடு உழுகிறது

    • இ)இறைவனடி சேர்ந்தார்

    • ஈ)இவையனைத்தும்.

    Correct Answer
    A. அ)வெற்றிலைத் தின்றான்
  • 27. 

    46) ‘எல்லாரும்’ எனும் சொல்லின் வாய்ப்பாடு 

    • அ)தேமாங்காய்

    • ஆ)கூவிளம்

    • இ)கருவிளங்காய்

    • ஈ)கூவிளங்காய்

    Correct Answer
    A. அ)தேமாங்காய்
  • 28. 

    21)அங்கை – பிரித்து எழுதுக 

    • அ)அ + கை

    • ஆ)அங்கு + கை

    • இ) அகம் + கை

    • ஈ)ஆம் + கை

    Correct Answer
    A. இ) அகம் + கை
  • 29. 

    41)பொருத்துக       a) தொல்லுடு       - 1.பெயரெச்சம்       b) மாநகர்             - 2.உரிச்சொற்றொடர்       c) ஓடி                   - 3.பண்புத்தொகை       d) வியந்த             - 4வினையெச்சம்             a b c d 

    • அ) 3 2 4 1

    • ஆ) 3 2 1 4

    • இ) 3 1 4 2

    • ஈ) 3 1 2 4

    Correct Answer
    A. அ) 3 2 4 1
  • 30. 

    32)சந்திப்பிழையற்ற தொடர் எது? 

    • அ)திருக்குறள் உலகப்பொதுமறை எனப் போற்றப்படுகிறது

    • ஆ) திருக்குறள் உலகப்பொதுமறை எனப் போற்றபடுகிறது

    • இ) திருக்குறள் உலகப்பொதுமறை என போற்றப்படுகிறது

    • ஈ) திருக்குறள் உலகபொதுமறை எனப் போற்றப்படுகிறது

    Correct Answer
    A. அ)திருக்குறள் உலகப்பொதுமறை எனப் போற்றப்படுகிறது
  • 31. 

    44)வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று ஐந்தடி முதல் பன்னிரண்டு அடிவரை பெற்று வருவது 

    • அ)பஃறொடை வெண்பா

    • ஆ)இன்னிசை வெண்பா

    • இ)நேரிசை வெண்பா

    • ஈ) சிந்தியல் வெண்பா

    Correct Answer
    A. அ)பஃறொடை வெண்பா
  • 32. 

    18)தீந்தமிழ் – பிரித்து எழுதுக 

    • அ)தீ + தமிழ்

    • ஆ)தீம் + தமிழ்

    • இ)தீமை + தமிழ்

    • ஈ)தீய + தமிழ்

    Correct Answer
    A. ஆ)தீம் + தமிழ்
  • 33. 

    49)சொல் மீண்டும் மீண்டும் வந்து வெவ்வெறு பொருளைத் தருவது 

    • அ)சொல் பின்வரு நிலையணி

    • ஆ)பொருள் பின்வரு நிலையணி

    • இ)சொற்பொருள் பின்வரு நிலையணி

    • ஈ)பிரிமொழி சிலேடை

    Correct Answer
    A. அ)சொல் பின்வரு நிலையணி
  • 34. 

    15) கூற்று 1 : அடுக்குத் தொடர் பிரித்தால் பொருள் தரும்   கூற்று 2 : இது இசை, குறிப்பு, பண்பு முதலிய பொருள்களில் வரும் 

    • அ)கூற்று 1 சரி கூற்று 2 அதற்கு சரியான விளக்கமாகும்.

    • ஆ)கூற்று 1 சரி கூற்று 2 தவறான விளக்கமாகும்.

    • இ)கூற்று 1 தவறு கூற்று 2 சரியன விளக்கம்.

    • ஈ)இரண்டு கூற்றுகளும் தவறு.

    Correct Answer
    A. ஆ)கூற்று 1 சரி கூற்று 2 தவறான விளக்கமாகும்.
  • 35. 

    29)குன்றேறி – இலக்கணக் குறிப்பு தருக. 

    • அ) இரண்டாம் வேற்றுமைத் தொகை

    • ஆ)ஏழாம் வேற்றுமைத் தொகை

    • இ)ஐந்தாம் வேற்றுமைத் தொகை

    • ஈ)மூன்றாம் வேற்றுமைத் தொகை

    Correct Answer
    A. ஆ)ஏழாம் வேற்றுமைத் தொகை
  • 36. 

    24)திசைப்பெயர் புணர்ச்சிக்குச் சான்று 

    • அ)சோனாடு

    • ஆ)மேனாடு

    • இ)கீழ் நிலை

    • ஈ)நாற்றிசை

    Correct Answer
    A. ஆ)மேனாடு
  • 37. 

    25)பசுமை + இலை 

    • அ)பச்சிலை

    • ஆ)பசும் இலை

    • இ)பாசிலை

    • ஈ)பசுவிலை

    Correct Answer
    A. இ)பாசிலை
  • 38. 

    12) மெல்ல – என்பது, 

    • அ)குறிப்பு பெயரெச்சம்

    • அ)குறிப்பு வினையெச்சம்

    • இ)தெரிநிலை பெயரெச்சம்

    • ஈ)தெரிநிலை வினையெச்சம்.

    Correct Answer
    A. அ)குறிப்பு வினையெச்சம்
  • 39. 

    31) ஓங்க, உழு, கொடு, ஒலி என்னும் வேர்ச்சொற்களின் வியங்கோள் வினைமுற்று, வினையெச்சம், தொழிற்பெயர், பெயரெச்சம் ஆகியவை முறையே, 

    • அ)ஓங்குக, உழுத, கொடுத்தல், ஒலித்த

    • ஆ)ஓங்குக, உழுது, கொடுத்தான், ஒலித்து

    • இ)ஓங்குக, உழுதான், கொடல், ஒலித்தல்

    • ஈ)ஓங்குக, உழுது, கொடுத்தல், ஒலித்த

    Correct Answer
    A. ஈ)ஓங்குக, உழுது, கொடுத்தல், ஒலித்த
  • 40. 

    20)காலம் கரந்த பெயரெச்சம் எனப்படுவது 

    • அ)குறிப்பு பெயரெச்சம்

    • ஆ) குறிப்பு வினைமுற்று

    • இ)வினைத்தொகை

    • ஈ)வினையாலனையும் பெயர்.

    Correct Answer
    A. இ)வினைத்தொகை
  • 41. 

    38)எயில் காத்தல் 

    • அ)நொச்சி

    • ஆ)கரந்தை

    • இ)உழிஞை

    • ஈ)காஞ்சி

    Correct Answer
    A. அ)நொச்சி
  • 42. 

    6. “தற்சுட் டளமொழி ஐம்மூ வழியும்   நையும், ஔவும் முதலற் றாகும்”
    • எனும் நூற்பா எதனைக் குறிக்கிறது.

    • அ)சுட்டு எழுத்துகளை

    • ஆ)அளபெடை

    • இ)ஐகாரக்குறுக்கம்

    • ஈ)ஔகாரக்குறுக்கம்.

    Correct Answer
    A. ஈ)ஔகாரக்குறுக்கம்.
  • 43. 

    33)மணமுழா, நெல்லரிகிணை எனப்படுவது 

    • அ) யாழ்

    • ஆ) பண்

    • இ) பறை

    • ஈ) பூ

    Correct Answer
    A. இ) பறை
  • 44. 

    4.கீழ் காண்பவையுள் மகரக்குறுக்கம் எது? 

    • அ)வரும் மாணவன்

    • ஆ)படிக்கும் வளவன்

    • இ)விளையாடும் கண்ணன்

    • ஈ)பாடும் அழகன்.

    Correct Answer
    A. ஆ)படிக்கும் வளவன்
  • 45. 

    19)உவம உருபு அல்லாதது எது? 

    • அ)கடுப்ப

    • அ)உழற

    • இ)உவப்ப

    • ஈ)புரைய

    Correct Answer
    A. இ)உவப்ப
  • 46. 

    34) நிரை கவர்தல் எந்த நிலத்தின் தொழில் 

    • அ)குறிஞ்சி

    • ஆ)நெய்தல்

    • இ)பாலை

    • ஈ)முல்லை

    Correct Answer
    A. இ)பாலை
  • 47. 

    10) நூற்பாவை நிறைவு செய்க.   “செய்பவன், கருவி, நிலம், செயல் காலம்   செய்பொருள் ஆறும் தருவது ______” 

    • அ) பெயரே

    • ஆ) குறிப்பே

    • இ)தெரி நிலையே

    • ஈ)வினையே

    Correct Answer
    A. ஈ)வினையே
  • 48. 

    28) “அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்   புல்லார் புரள விடல்”
    • எனும் குறளில் ‘விடல்’ என்பது

    • அ)தொழிற்பெயர்

    • ஆ)வியங்கோள் வினைமுற்று

    • இ)பண்புப் பெயர்

    • ஈ)வினைமுற்று

    Correct Answer
    A. ஆ)வியங்கோள் வினைமுற்று
  • 49. 

    47)கீழ்க்கண்டவற்றுள் பிறமொழிச் சொல் எது? 

    • அ)அஞ்சலகம்

    • ஆ)வல்லுநர்

    • இ)கிராமம்

    • ஈ)நிலுவை

    Correct Answer
    A. இ)கிராமம்

Quiz Review Timeline (Updated): Oct 12, 2014 +

Our quizzes are rigorously reviewed, monitored and continuously updated by our expert board to maintain accuracy, relevance, and timeliness.

  • Current Version
  • Oct 12, 2014
    Quiz Edited by
    ProProfs Editorial Team
  • Oct 11, 2014
    Quiz Created by
    Indianr1989
Back to Top Back to top
Advertisement
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.