10 - அறிவியல் - வேதியியல் - 09. கரைசல்கள்

15 Questions | Total Attempts: 934

SettingsSettingsSettings
Please wait...
10 - அறிவியல் - வேதியியல் - 09. கரைசல்கள்

Questions and Answers
 • 1. 
  ஒரு உண்மைக் கரைசல் என்பது, கரைபொருள் கரைப்பானால் ஆன ஒரு படித்தான கரைசல். சாக்பீஸ் துகள்கள் தண்ணீரில் கலந்த கரைசல் பல படித்தான கலவையாகும். இது உண்மைக் கரைசலா?
  • A. 

   ஆம்

  • B. 

   இல்லை

 • 2. 
  நீரைக் கரைப்பானாகக் கொண்ட கரைசல் நீர்க் கரைசலாகும். கார்பன் – டை – சல்பைடைக் கரைப்பானாகக் கொண்ட கரைசல் _______
  • A. 

   நீர்க்கரைசல்

  • B. 

   நீரற்றக்கரைசல்

 • 3. 
  உப்பின் கரைதிறன் 100 கிராம் தண்ணீரில் 36 கிராம் ஆகும். 20 கிராம் உப்பு நீரில் கரைக்கப்பட்டால் தெவிட்டிய நிலையை அடைய இன்னும் எத்தனை கிராம் உப்பு தேவைப்படும்?
  • A. 

   16 கி

  • B. 

   20 கி

  • C. 

   36 கி

  • D. 

   56 கி

 • 4. 
  இரண்டு திரவங்கள் ஒன்றில் ஒன்று காரையுமானால் அத்திரவங்கள் ________ எனப்படும்.
  • A. 

   இரண்டறக் கலப்பவை

  • B. 

   இரண்டறக் கலவாதவை

 • 5. 
  சூரிய ஒளி நும் வகுப்பில் ஜன்னல் வழியே வரும்போது, அதன் பாதை தெரிவதன் காரணம் ஒளியின் _______
  • A. 

   பிரதிபலிப்பால்

  • B. 

   சிதறலால்

 • 6. 
  ஒரு கரைசலின் துகள்கள் நீநுண்ணோக்கி வழியே தெரிவதனால் அக்கரைசல் _______ எனப்படும்.
  • A. 

   உண்மைக் கரைசல்

  • B. 

   கூழ்மக் கரைசல்

 • 7. 
  இருமடிக் கரைசலில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை ______  
  • A. 

   ஒன்று

  • B. 

   இரண்டு

  • C. 

   நான்கு

 • 8. 
  ஆழ்கடலில் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வாயுக்கலவை _______
  • A. 

   ஹீலியம் – ஆக்ஸிஜன்

  • B. 

   ஆக்ஸிஜன் – நைட்ரஜன்

  • C. 

   ஆக்ஸிஜன் – ஹைட்ரஜன்

  • D. 

   ஹீலியம் – நைட்ரஜன்

 • 9. 
  புவியின் மணற்பரப்பு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நைட்ரஜனை தன்னுள் கொள்ள முடியாத நிலை _______
  • A. 

   தெவிட்டிய நிலை

  • B. 

   தெவிட்டாத நிலை

 • 10. 
  சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  • A. 

   தெவிட்டிய கரைசலில் கரைபொருள் மற்றும் கரைப்பான் சமமாக இருக்காது.

  • B. 

   தெவிட்டிய கரைசலில் கரைபொருள், கரைப்பானை விட குறைவாக இருக்கும்.

  • C. 

   தெவிட்டிய கரைசலில் கரைபொருள் மற்றும் கரைப்பான் சமமாக இருக்கும்.

  • D. 

   தெவிட்டிய கரைசலில் கரைபொருள், கரைப்பானை விட அதிகமாக இருக்கும்.

 • 11. 
  உங்களுடைய வீட்டின் ஜன்னல் வழியே சூரிய ஒளிபுகும் போது, மாசுத் துகள்கள் ஒளிச் சிதறல் அடைவதால் ஒளியில் பாதியானது தெரிகிறது. இந்நிகழ்வு ________
  • A. 

   பிரௌனியின் இயக்கம்

  • B. 

   டிண்டால் விளைவு

  • C. 

   ராமன் விளைவு

  • D. 

   சீரான இயக்கம்

 • 12. 
  சோடியம் குளோரைடின் கரைதிறன் _________ (கி / 100 கி.லி.)    
  • A. 

   92 கி

  • B. 

   184 கி

  • C. 

   95 கி

  • D. 

   36 கி

 • 13. 
  கீழ்கண்டவற்றுள் எது உண்மைக் கரைசல்?
  • A. 

   பால்

  • B. 

   கார்பன் டை சல்பைடில் கரைக்கப்பட்ட உப்பு

  • C. 

   இரத்தம்

  • D. 

   சர்க்கரைக் கரைசல்

 • 14. 
  கார்பன் – டை – சல்பைடைக் கரைப்பானாகக் கொண்ட கரைசல் __________
  • A. 

   நீர்க் கரைசல்

  • B. 

   நீரிலிக் கரைசல்

  • C. 

   திடக் கரைசல்

  • D. 

   உண்மைக் கரைசல்

 • 15. 
  உண்மைக்கரைசலில் துகளின் அளவு ______
  • A. 

   10Å முதல் 1000Å வரை

  • B. 

   1Å முதல் 10Å வரை

  • C. 

   100Å க்கு மேல்

  • D. 

   10000Å க்குள்

Back to Top Back to top