Learn About Our Religion- Teacher Packiam (Sjkt Pt)

15 | Total Attempts: 11

SettingsSettingsSettings
Please wait...
Learn About Our Religion- Teacher Packiam (Sjkt Pt)


Questions and Answers
 • 1. 
  கோயிலில் என்ன செய்யக் கூடாது?
  • A. 

   கை கால் கழுவுதல்

  • B. 

   பிரசாதம் வழங்குதல்

  • C. 

   திருநீறைக்  கொட்டுதல்

  • D. 

   அகல் விளக்கு ஏற்றுதல்

 • 2. 
  நாம் உணவு உண்டபின் மீதமான உணவை பிறருக்கு கொடுக்கலாம்.
  • A. 

   சரி

  • B. 

   பிழை

 • 3. 
  நாம் எப்பொழுது வழிபட வேண்டும்?
  • A. 

   உண்பதற்கு முன்

  • B. 

   பயணத்திற்கு முன்

  • C. 

   உறங்குவதற்கு முன்

  • D. 

   படிப்பதற்கு முன்

 • 4. 
  இவற்றுள் எது பிரார்த்தனை அல்ல?
  • A. 

   இல்லப்பிரார்த்தனை

  • B. 

   கூட்டுப்பிரார்த்தனை

  • C. 

   ஆத்ம சாந்தி பிரார்த்த்னை

  • D. 

   உபசரிப்பு பிரார்த்தனை

 • 5. 
  மூத்தோர்களையும் சான்றோர்களையும் அவமதிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • A. 

   சரி

  • B. 

   பிழை

 • 6. 
  பூஜை மேடையில் செய்ய வேண்டியவை....
  • A. 

   வருடம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.

  • B. 

   தீர்த்தச் செம்பை வாரம் ஒரு முறை கழுவ வேண்டு.

  • C. 

   அழகான பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.

 • 7. 
  நமது செயல்களில் எவ்வாறு பணிவை காட்டலாம்?
  • A. 

   நடை

  • B. 

   நடனம்

  • C. 

   உடை

  • D. 

   பாவனை

  • E. 

   அழகு

 • 8. 
  உணவு உண்ணும் முன் பாட வேண்டிய பாடல்...[Blank]
 • 9. 
  இவர் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் மிகச் சிறந்து விளங்கினார். இவர் மிகச்சிறிய வயதிலேயே, வாய்மொழி, இசைக் கருவிகள் வாசிப்பது, மற்றும் தியானம் ஆகியவற்றைப் பயிற்சி மேற்கொண்டு பயின்றார். இவர் இளம் வயதில் இருக்கும் பொழுதே, சாதி மத பாகுபாட்டால் சமூகத்தில் நிலவிய மூடபழக்கவழக்கங்கள் பற்றிப் பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பினார்.
  • A. 

   சுவாமி விவேகாந்தர் 

  • B. 

   ஆதிசங்கரர்

  • C. 

   மாணிக்கவாசகர்

  • D. 

   திருவள்ளுவர்

 • 10. 
  “ஆம், நான் உன்னை இங்கே பார்ப்பது போல், இன்னும் தெளிவாக கடவுளைப் பார்த்திருக்கிறேன்” என்றார். இது சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, அதிர்ச்சியாகவும், புதிராகவும் இருந்தது. யார் இப்படி கூறியிருக்கக்கூடும்?
  • A. 

   சம்பந்தர்

  • B. 

   அப்பர்

  • C. 

   ஶ்ரீ ராமகிருஷ்ணர்

  • D. 

   பிரகலாதன்

 • 11. 
  குருகுலவாசம் செய்யும் காலத்தில் தினந்தோறும் பிச்சை எடுத்து குருவிற்கு அர்பணித்த பிறகு உண்பது இவரது வழக்கமாயிருந்தது. ஒருநாள் ஓர் ஏழை அந்தணர்  வீட்டு வாசலில் நின்றார். ஒளி வீசும் முகத்துடன்  இந்த சிறுவனுக்கு கொடுக்கக் கூடியதாக தன்னிடம் ஏதுமில்லையே என்று அந்த ஏழையின் மனைவி வருந்தினாள். பின் வீடு முழுவதும் தேடி, உலர்ந்து போன நெல்லிக்கனி ஒன்றை  தானமாக அளித்தாள். இந்த கருணைச் செயல் அவரின் கண்களை கண்ணீர் குளமாக்கியது. வறுமையில் வாடும் போதே தானம் கொடுக்கும் எண்ணம் கொண்ட இவளிடம் செல்வம் இருந்தால் அது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைத்த அவர், அக்குடும்பத்தின் வறுமை நீங்க லட்சுமி தேவியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாடித் துதித்தார். 19வது ஸ்லோகம் பாடி முடித்த போது அந்த ஏழையின் வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனியை நிரப்பி மகாலட்சுமி பொன்மழை பொழிந்தாள். இந்த நிகழ்ச்சி ஒரு அட்சய திரிதியை நாளில் நடந்தது. (இதன் அடிப்படையில் தான் இப்போதும் கூட அட்சய திரிதியை நாளில் காலடி கிருஷ்ணன் கோயிலில் கனகதாரா யாகம் நடைபெறுகிது. இவர் யாராக இருக்கக் கூடும்?
  • A. 

   மாணிக்கவாசகர்

  • B. 

   ஆதிசங்கரர்

  • C. 

   திருநாவுக்கரசர்

  • D. 

   திருமூலர்

 • 12. 
  மக்களிடம் தீப விளக்கைத் தொடர்ந்து வழிபட்டு வரச் சொல்லிவிட்டு, ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்கு கிறபடியால், தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் கண்டு ஆராதியுங்கள். நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்று செய்தி அளித்தார்.1874 ஆம் வருடம் தை மாதம் 19 ஆம் நாள், புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் அவர் அனைவருக்கும் அருளாசி வழங்கி மறைந்தார். இவர்தான் ............
  • A. 

   ஆதிசங்கரர்

  • B. 

   வள்ளளார்

  • C. 

   திருமூலர்

  • D. 

   அப்பர்

  • E. 

   விவேகானந்தர்

 • 13. 
  பசி என்ற ஒன்று இருப்பதேன்? பசி இல்லாவிட்டால் உணவுக்காக மக்கள் ஒருவரை ஒருவர் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படியில்லாத போது, ஒருவருக் கொருவர் உதவ மாட்டார்கள். அப்படி உதவவில்லை என்றால், ..........................................  இல்லாமல் போய்விடும்.
  • A. 

   மனிதநேயம்

  • B. 

   பிறப்பு இறப்பு

  • C. 

   நேசம் பாசம்

  • D. 

   அக்கறை

Back to Top Back to top